தமிழகம்

பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் 3 வது பொதுக்குழு கூட்டம்

137views
வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் மூன்றாவது பொதுக்குழு கூட்டம் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள ரஞ்சனி இல்லம் மாடியில் வைத்து 17.09.2023 ஞாயிறு அன்று அதன் தலைவர் வண்ணார்பேட்டை திரு.ஜெயராஜ்  தலைமையில் நடைபெற்றது.

சென்னை வானொலியின் மூத்த நேயர்கள் ஐயப்பன்தாங்கல் திரு.பழனி, திரு.மயிலைபட்டாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர், பாசப்பறவைகளின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் திரு.நெல்லை பாரதி வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சென்னை வானொலியின் மூத்த நேயர்கள் கிண்டி திருமதி நசீமா, திருமதி.ரேவதி மற்றும் நான் மீடியா, நான் எஃப் எம் நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.ஜே நாகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பாசப்பறவைகளின் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பொறுப்பாளர் திருமதி.ஈஸ்வரி அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, முக்கிய தீர்மானங்கள் ஆகியவை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையங்கள் முதன்மை மற்றும் ரெயின்போ பண்பலை அலைவரிசைகள் இணை ஒலிபரப்பு என்று மாற்றம் செய்யப்பட்டு , பிற மொழிகளில் மற்றும் பிற மாநில நிலையங்களின் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்யும் நிலையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவிக்கும் விதமாக பிரச்சார பாரதியின் டைரக்டர் ஜெனரல் அவர்களுக்கு 1000 கடிதங்கள் எழுதி அனுப்பி வைக்கும் வகையில், முதற்கட்டமாக சென்னையிலிருந்து 100 கடிதங்கள் எழுத பாசப்பறவைகள் நற்பணி மன்றத்தின் சார்பில் அஞ்சல் அட்டைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நேயர்களுக்கு அனுப்பி வைக்க முகவரியும், அதில் இடம்பெற வேண்டிய கருத்துருவும் இணைத்து, அனைத்து வானொலி நேயர்களும் எழுதி அனுப்பி வைக்குமாறு நிகழ்வில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

பாசப்பறவைகளின் துணைத் தலைவர் குப்புக்குறிச்சி திரு.சுந்தர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர் அல்லிநகரம் திரு .எஸ்.மகாதேவன், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் பொறுப்பாளர் திரு.இளஞ்செழியன், அனைத்து மாவட்டங்களின் பெண் நேயர்கள் ஒருங்கிணைப்பாளர் பாவூர்சத்திரம் திருமதி.புஷ்பலதா துரைமணி உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த வானொலி நேயர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!