தமிழகம்

நெல்லையில் “கலைஞரின் நகைச் சுவைத்திறன்” எனும் தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு இலக்கிய கூட்டம்..

115views
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டுத் தொடர் இலக்கிய கூட்டம் கலைஞரின் நகைச்சுவைத்திறன் எனும் தலைப்பில் நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் ஒன்பதாவது கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. கவிஞர் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞரின் நகைச்சுவைத்திறன் ‘ எனும் தலைப்பில் கவிஞர் சக்தி வேலாயுதம் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். எழுத்தாளர் நாறும்பூநாதன் தமிழ்ச்செம்மல் பாமணி வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர் தச்சை மணி மற்றும் சொக்கலிங்கம் ஆகியோருக்கு சாகித்ய அகாடமி வெளியிட்ட கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூல் வழங்கப்பட்டது. கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் ஜெயபாலன், புன்னைச் செழியன், ரம்யா, ஆசிரியர் சிவசெல்வ மாரிமுத்து, மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், இருளப்பன் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!