தமிழகம்

ஓசூரில் பா.ஐ.க. சார்பில் ஆர்பாட்டம்

134views
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காட்டு யானைகளை கட்டுப்படுத்தி விவசாயத்தை காக்கக்கோரியும் , வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு உயர்த்தி வழங்க கோரியும் , வன விலங்குகளால் ஏற்பட்ட சேதத்திற்கு உடனடியாக ஆண்டறிய சந்தை மதிப்பீட்டில் நிவாரணம் வழங்க கோரியும் , ஜவாளகிரி வன சரகத்தில் மீதமுள்ள பகுதிகளில் சூரிய சக்தி மின்வேலி அமைத்து யானைகளை கட்டுப்படுத்த கோரியும் , மலை கிராமங்களுக்கு சாலை வசதி மற்றும் பேருந்து வசதி செய்துகொடுக்க கோரியும் தளி மத்திய ஒன்றிய தலைவர் ஹரிஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான K.P.இராமலிங்கம் Ex.MP மாவட்ட தலைவர் M.நாகராஜ் Ex.MC தேசிய பொதுக்குழு உறுப்பினர் G.பாலகிருஷ்ணன் மாநில விவசாய அணி துணை தலைவர் M.கோவிந்தரெட்டி எஸ்.டி அணி மாநில செயலாளர் S.பாபன்னா மருத்துவ பிரிவு தலைவர் C.நாகேஷ் ஆகியோர் ஆகியோர் தமிழக அரசையும் வனத்துறையையும் கண்டித்து உரையாற்றினார்.
உடன் மாவட்ட நிர்வாகிகள் K.ஸ்ரீனிவாச ரெட்டி M.ராஜன்னா A.ஸ்ரீனிவாசன் A.பார்த்திபன் T.ஆனந்த் S.குருமூர்த்தி மற்றும் ஒன்றிய தலைவர்கள் G.வெங்கடராஜ் L.சந்துரு M.சிவகுமார் V.கிரிஷ்ணமுர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னதாக தளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஜவாளகிரி வன சரக அலுவலர் ஆகியோரிடம் பாஜக சார்பில் மனுஅளிக்கப்பட்டது.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!