தமிழகம்

திருப்பரங்குன்றம் விரகனூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. 74வது குடியரசு தினவிழாவுடன் முன்னாள் மாணவர்கள் நல நிதி மூலம் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு உதவும் மையம் ஏற்பாடு .

375views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விரகனூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஆனந்தன், துணை முதல்வர் சகாதேவன் ஆகியார் வாழ்த்துரை கூறினர். முன்னாள் மாணவர் சங்க தலைவர் சுரேந்திரன் வரவேற்புரை கூறினர். சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணவன் கலந்துகொண்டார். விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.  விழாவில் முன்னால் மாணவர்கள் நிதி மூலம் படிப்பை தொடர முடியாமல் உள்ள இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஆலோசனை வழிகாட்டும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!