தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக பா.ம.க கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

136views
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கி. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார் , மாவட்ட தலைவர் GR@V.கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மேலும் சிறப்புரையாக பா.முனிராஜ் முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன், மாநில தலைவர் ஊடகப் பிரிவு கனல் கோ.கதிரவன் ஆகியோர் வரவேற்பாற்றினர்.

மேலும் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் பி.எல்.சரவணன், மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம், முன்னாள் வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.கே.கிருஷ்ணன் ஆகியோர் வழி மொழிந்தனர். இக்கூட்டத்திற்கான நோக்கம் வருகின்ற 28.01.2023 அன்று பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு நிகழ்ச்சிகள் குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் செயல்பாடுகள் மேற்கொள்ள சிறப்பு வாய்ந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் நாளை மற்றும் மறுநாள் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஒன்றிய கிராமம் உட்பட களப்பணியாற்றுதலுக்கான 10 குழு மேற்கொண்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களை பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட ஒன்றிய கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான கிளை மற்றும் பூத் கமிட்டியை அமைக்கும் பணியை செய்வதற்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!