ஜி. காளையப்பன் தயாரிப்பில் புதுமுகங்களின் அணிவகுப்பில் காதலர்களின் ஆபத்தை சொல்லும் ” இன்னும் ஒரு காதல் பயணம் ” புது இயக்குனர் அறிமுகம். |
145
” காதலின் பொன்வீதியில் , பூவினும் மெல்லிய பூங்கொடியான அவள் அவன்தான் என் கணவன் என மனதில் காதல் கோட்டை கட்டி, மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க அவனை காதலித்தாள். இதன் அடுத்தகட்டம் என்ன தெரியுமா? மனம் கவர்ந்த காதலர்கள் தனிமையில் சந்தித்து தங்களது அன்பை பரிமாறுவதுதான். அப்படி ஒருநாள் நாயகனும் , நாயகியும் சந்தித்தபொழுது தான் இடி என அந்த விபரீதம் நிகழ்ந்தது. அந்த விபரீதத்தால் நடந்தது என்ன? மனம் ஒன்றுபட்ட காதலர்கள் தனிமையில் இனிமை காண செல்லும் பொழுது அதுவும் தொடைக்கானலில் காதலர்களுக்கு வரும் ஆபத்துகளை வரிசைபடுத்தி திரில்லாகவும், திகிலாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லும் படம் தான் “இன்னும் ஒரு காதல் பயணம்” என்று மட மட வென்று கூறினார் படத்தின் இயக்குனர் ஆர்.டி.குஷால் குமார்.