தமிழகம்

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில், 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அசைவு திருவிழா.

198views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கரும்பாறை ஸ்ரீ முத்தையா சாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் அசைவ திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டு அனுப்பப்பட்டி – யைச்சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளான கரடிகல், செக்கானூரணி, சாத்தங்குடி சொரிக்காம்பட்டி உள்ளிட்ட 18க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட ஆண்கள் திருவிழாவில் கலந்து கொண்டு கரும்பாறை ஸ்ரீ முத்தையா சாமியை வழிபட்டு ,  திருவிழாவிற்கு வந்தவர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் ,நூறு ஆடுகள் மற்றும்2000 கிலோ அரிசி கொண்டு சமைத்த உணவினை கரும்பாறையில் வைத்து மலைபோல் குவிக்கப்பட்டு , 150 ஆடுகளை வைத்து குடல் குழம்பு /கறி கூட்டு உள்ளிட்டவற்றை தயார் செய்து ,அங்கு கூடும் ஆண்களுக்கு ,விழா குழுவினர் பரிமாறி மகிழ்ந்தனர் .

விவசாயம் செழிக்கவும் , நோய் நொடியின்றி மக்கள் வாழவும் ஆண்டு தோறும் இந்த திருவிழாவை நடத்துவதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

திருவிழாவில் பங்கு கொண்டு அசைவ உணவு உண்டு மகிழ்ந்த 5000 -க்கும் மேற்பட்ட ஆண்களின் இலைகள் சாப்பிட்ட பின்பு அதே இடத்தில் விட்டு செல்வர் .அந்த இலை காய்ந்து மண்ணோடு மண்ணாக மாயமாகும் என்பது ஐதீகம்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!