தமிழகம்

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச்சான்றிதழ். கால்நடை மருத்துவ மனைக்கு ஆர்வத்துடன் அழைத்து வரப்பட்ட காளைகள்

113views
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் இன்று முதல் ஜல்லிக்கட்டு காளைகளுக்குகான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அலங்காநல்லூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 30க்கும் மேற்றபட்ட காளைகள் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டன பரிசோதனையிபோது மாட்டின் உயரம் 120 cm க்கு மேல் உள்ளதா, பற்கள் நான்கு உள்ளனவா, நோயுற்ற, நலிவுற்ற, காயமுற்ற காளைகளாக உள்ளனவா என்பன போன்றவை உறுதிசெய்யப்பட்டன. மேலும் திமில் உடன் கூடிய நாட்டு மாடுகள் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தபட்டன.
பரிசோதனை முடிந்த முழு உடல்தகுதி பெற்ற காளைகளுக்கு இன்று தகுதிச்சான்றிதல் அதன் உரிமையாளர்களிடம் கால்நடை உதவி மருத்தவர் வழங்கினார். சான்றிதழில் சமீபத்தில் காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் உதவியாளர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் உரிமையாளரின் ஆதார் நகல் முழு முகவரி முதலானவை இடம் பெற்றிருந்தன. மேலும் இந்த தகுதி சான்றிதழை வைத்துதான் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெருவதற்கான டோக்கன்களை காளை உரிமையாளர்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!