தமிழகம்

விருதுநகர் அருகே கலைத் திருவிழா

102views
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக, கலைத்திருவிழா போட்டி நிகழ்ச்சி, காரியாபட்டியில் நடைபெற்றது. இப்போட்டிகளில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் வீணை இசையில் ,மாணவி காய்த்ரி மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார் . பரதநாட்டியத்தில் மாணவி பிரியதர்ஷினி மாவட்ட அளவில் முதல் இடத்தையும் மாணவி சாதனா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர் செவ்வியல் இசையில் மாணவி நிஷா, மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். இசைப்போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்த பள்ளி மாணவிகளுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ஆலோசனையின்பேரில், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை. சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில்,ஸ்ரீ சாமிநாத குருகுலத்தின் ஆசிரியர் பாலகணேஷ் பங்கேற்றார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!