தமிழகம்

திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி மாநில அளவில் கவிதை புனைதல் போட்டியில், இரண்டாம் பரிசு பெற்று சாதனை – வருகிற 12-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் ,பதக்கங்களும் பரிசுகளும் பெற உள்ளார்.

137views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே லாலாபுரம் கிராமத்தைச் சார்ந்த பழனி முருகன் – ஸ்ரீதேவி தம்பதியின் மூன்றாவது பெண் குழந்தையான ரதி (13) லாலாபுரத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்து கவிதை எழுதும் பழக்கம் கொண்ட ரதி, இப்பள்ளியில் பயின்று இருக்கும் போது, ஊராட்சி , ஒன்றிய,வட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத்திறன் போட்டிகளில் கவிதை போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளார்.  மேலும் மதுரையில் சில தினங்களுக்கு முன்பு ,மாநில அளவில் நடைபெற்ற கவிதை புனைதல் போட்டியில் ரதி பங்கேற்று , இளைஞனே எழுந்து வா என்ற தலைப்பில் கவிதை எழுதி மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் .இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி மற்றும் ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர் .மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை வருகிற 12-ம் தேதி நேரில் சந்தித்து ரதி (13) அவரது வாழ்த்துக்கள் மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற உள்ளார்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!