கட்டுரை

தமிழ்த் திரையுலகில் பெண்ணின் புனைவு

562views
மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதில் திலையுலகம் முக்கிய பங்கு வகிக்கிறது.  மக்களின் எதார்த்த சூழல்களையும், போராட்ட நிகழ்வுகளையும் நம் மனக்கண் முன் நிகழ்த்துவதில் திரையுலகம் இன்றியமையாததாக செயல்படுகிறது. இதில் பெண்  கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது  எனலாம். இலக்கிய உலகில் ஒரு பெண்ணின் புனைவு நுகர்வு பொருளாகவே பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதைத்தான்டி கலை உலகில் அவள் எப்படிப் பார்க்கப்படுகிறாள் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பெண் புனைவு :
ஆணின் வெற்றியின் அடிநாதமாக விளங்கும் பெண்ணே, கலையின் கருதுகோளாகவும் அமைகிறாள்  என்பதில் ஐயமில்லை. அது அவளது புறத்தோற்றம் பற்றிய சிந்தனையை மட்டுமன்றி அகத்தில் காணும் பண்பு நலன்களின் மென்னை தன்மையும் என்று கொள்ளலாம். இலக்கியம், கலை அவ்விரண்டிலும் பெண் என்பவள் ஒரு நுகர்வு பொருளராகவே பார்க்கப்படுகிறாள். இலக்கியம் மனக்கண்ணில் காட்சிப் படுத்துகிறது. கலை நிஜக்கண்களில் காட்சி ப்  படுத்துகிறது, இலக்கியத்தில் உள்ளம் பேசுகிறது. கலையில் உடல் பேசுகிறது.
திரையுலகப் பெண் :
கருப்பு வெள்ளை காலந்தொட்டு திரையுலகம் பெண்ணிற்கு ஒரு முக்கிய இடத்தையே கொடுக்கிறது, காரணம் இலைஞர்களின் எதிர்பார்ப்புகளையும், ரசனைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக படைக்கப்படுகிறாள். 1947ல் முதலில் பெண்ணின் தலைப்பில் உருவான “மிஸ் மாலினி”  படத்தை பெண்ணிற்கான முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் என்று கூறலாம். இதற்கு முன் வெளிவந்த அபரஞ்சினி, கண்ணம்மா என் காதலி போன்ற படங்களும் பெண்ணின் சிறப்பு எனக் கருதலாம்.
பெண்ணின் பிரச்சனைகளை மையமிட்ட படங்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணே சமூகத்திற்கு அறக்ககருத்துக்களை எடுத்துரைக்கும் புனைவை ‘ஔவையார்‘ படத்தில் காணலாம். கண்ணகியின் பூம்புகார் படத்தில், வேறொரு பெண்ணை நாடிச் சென்றதால் பொருள் இழந்து, புகழ் இழந்து இறுதியாக உயிரையும் இழக்கும் சூழல் வாய்க்கிறது. இந்த அவலநிலையை ஒரு புரட்சி நிலையாக மாற்றி நீண்ட போராட்டத்திற்குப் பின் தன் தணவன் நியாயத்தை வெளிக்காட்டி கண்ணகி தெய்வீக நிலையை அடைகிறாள். அது பெண்ணிய சிந்தனையைக் காட்டுவதோடு, பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும் பார்க்கிறது எனலாம்.
 “ நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை
   நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
   நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்பவ தில்லையாம். ”

நியாயத்திற்காக எதையும் எதற்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் பெண்களுக்குள் இயல்பாய் இருக்க வேண்டும் என்பது பாரதியின் கருத்து.

அவலநிலை:
பாரதி, பெரியார், அம்பேத்கார் போன்ற பெண்ணுரிமைக்குப் போராடிய மாமனிதர்களுக்கு மத்தியிலும், பெண்களை அடிமைப்படுத்தும் அவலநிலையும் இருந்தது என்பல் ஐயமில்லை. கண்ணகியைப்போல் ஒவ்வொரு கண்ணகியும் தங்கள் இல்லங்களில் தன் கணவனின் போக்கு நிலையைக் கண்டிக்க முடியாமல் சகித்துக் கொள்ளும்  தியாக நிலையிலே வாழ்க்கை நடத்துகின்றனர். அந்நிலை பல திரைப்படங்களில் காணப்படுவதை அறியலாம்.
அந்த வகையில் சில…
தன் குடும்ப சுமைக்காக தன் சுமைகளை நிராசையாக்கும் அவள் ஒரு தொடர்கதை.
தன் மகள் எதிர்காலத்திற்காகத் தன் பொருந்தாக் காதலை உதரும் அபூர்வராகங்கள்.
தன் வாய்ப்பைவும், காதலையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இறுதி முடிவெடுக்கும் வறுமையின் நிறம் சிறப்பு.
பிரபல இசைக்கலைஞரின் ரசிகையாக இருந்து தன் காதலால் பெற்ற குழந்தையை தானம் செய்யும் சிந்துபைரவி.  ஒரு பெண் தன் காதல் உணர்வுகளை தன் குடும்ப சுமைக்குள் அடகு வைக்கும் ஒரு தியாக பாத்திரமாகவே தான் பார்க்கப்படுகிறாள். இது அவளது வலியைக்காட்டுவதோடு அவளது ஒடுக்குமுறையையும் காட்டுகிறது என்றே சொல்லலாம்.
இப்படி திரைப்படம் கற்பனையால் பெண்ணிற்கான அடையாளத்தை, அவளுடைய தனித்திறமைகளை காட்டுவதோடு அவளுடைய தியாக நிலையையும் வெளிக்கொணர்வதில் தவறவிடுவதில்லை. அதன் முக்கிய பொருளாக, போகப்பொருளாகக் காட்டக்கூடிய இயக்குனர்களுக்கு மத்தியில் அவளுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்ததி, அதிலிருந்து அவள் மீண்டு வரக்கூடிய அவளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய சில எதிர் நீச்சலான, போராளிப்  பெண்களையும் காட்டத் தவறியதில்லை.
போராளி :
வாழ்க்கையில் போராடும் முக்கிய கதைமாந்தரில் பெண் சிறப்பிடம் பெறுகிறாள். அதில் நான் விரும்பும் கதாநாயகியாக சாவித்ரி அம்மாவைப் பார்க்கலாம். இவர் மாயாஜாலம், களத்தூர் கண்ணம்மா, நவராத்ரி, பாசமலர், போன்ற படங்களில் திறமையைக் காட்டியதோடு வாழ்வியல் சிக்கல்களை எதிர்நோக்கும் தன்னம்பிக்கையையும் காட்டியுள்ளார். நவராத்திரி படத்தில் 9  வேடங்களில் தங்களுடைய நவரசங்களையும் காட்டி சிவாஜிக்கு இணை இணையாக வெளிப்படுத்தி நடித்துள்ள விதம் அவரது கலைச்சிறப்பைக் காட்டுகிறது எனலாம். மேலும் ஆணிற்குப் பெண் சமம் என்ற கருத்தை முன்னெடுத்துச் செல்வதாக உணரலாம்.
மற்றொரு உதாரணமாக பாரதிராஜாவின் “முதல் மரியாதை” படத்தைக் கூறலாம்.  இதில் சாதாரண பரிசில் பெண்ணாகப் படைக்கப்பட்ட கதாபபாத்திரம் உடலளவில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல், உணவு மருந்துமாகக் கொடுத்து, ஒரு ஆண் படிகத்தின் ரீதியாக, ஆண் நட்பிற்காக கொலை செய்யும் அளவிற்குத் துணியும் அந்தத் தாய்மையான காதலை அவர் அழகாகக் காட்டியுள்ளார்.
இது போன்ற படங்கள் 80களில் நிறைய வெளி வந்தன. அதன் பிறகு வந்த படங்கள் எதாவது ஒரு இடத்தில் மட்டுமே பெண்ணை மையப்படுத்தக்கூடிய படங்களாக, ஒரு சூழல்களில் மட்டுமே ஆண் கதாபத்திரத்திற்கு இணையாக, ஒரு காட்சிப்பொருளாக பாடலில் மட்டுமே பதிவிடக்கூடிய மையப் பொருளாகத் தான் படைக்கப்பட்டுள்ளாள்.
இறைவி :

திரையுலகில் காணும் பல்வேறு கதாமாந்தர்களுக்கு மத்தியில் ஒரு முக்கிய கதாபாத்திரம் வரும் பொது மட்டும் வாய்ப்பைப் பயன்படுத்தும் பெண் நடிகைச் சிலருண்டு, அந்த வகையில் முக்கிய படமாக விளங்குவது “இறைவி.”
இது மூன்று பெண்களின் பிரச்சனைகளை மையமிட்டது. அவர்கள் மூவருமே வெவ்வேறு சூழல்களில் அவர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறி அதிலிருந்து மீளும் சூழல்கள் சித்தரிக்கப்பட்டவையாகும். இதில் “மனிதி வெளியே வா” என்னும் பாடல் பெண்ணியச் சிந்தனையோடு அமைவது சிறப்பாகும்.
அறம் :

மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய ஒரு பெண்ணின் பொறுப்பும், கடமையும் மிக அழகாக எடுத்தாளப்பட்டுள்ளது, மேலும் ஆணினை தேர்வு செய்யாது பெண்ணை தேர்வு செய்திருப்பது அவள் மீது கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது எனலாம். ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தையை மீட்டெடுக்கும் பெண்ணின் தன்னம்பிக்கையும் செயல்படும் திறமும் பெண்ணிற்கான அடையாளத்தைப் பதித்த கோபி நைனாரயேச் சாரும்.
36 வயதினிலே  & “அருவி” :

திருமணத்திற்குப்பின் தன் கனவுகளை ஒரு குவளைக்கள் சுருக்கிக் கொள்ளும் தியாக நிலையை 26 வயதினிலே படத்தில் காணலாம்.
‘அருவி’யில் எய்ட்ஸ் நோயால் பாதிகப்பட்ட ஒரு பெண்ணின் போராட்ட நிலையை மிக எதார்த்தத்தோடு காட்டியுள்ள விதம், அந்நோய்க்கான போராட்டத்தைக் காட்டுவதோடு, சமூகத்தில் பாலியல் வன்முறையின் கோர முகங்களையும் கிழித்தெறிவதாகப் பார்க்க முடிகிறது.
பாகுபலி :
இப்படி நிறைய படங்கள் பெண்ணிற்கான பிரச்சனைகளை மட்டுமே முன்வைத்த காலத்தில் அவளது அதிகாரத்திறனைக் காட்ட எழுந்தது பாகுபலி. இதில் ஒரு ஆணிற்கு இணையான திடமான கதாபாத்திரமாக தேவசேனாவும் ராஜமாதாவும் அமைந்திருப்பது அவளுக்குள் இருக்கும் ஒரு ஆண் சிங்கத்தைத் தட்டி எழுப்பியதாக உணர வைக்கிறது.
அடிமைநிலை மாறி அரசுரிமை பெறும்நிலை, பெண்ணின் விடுதலை மீட்டெடுப்பாக உணர வைக்கிறது,
”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.”
என்ற பாரதியின் வரிகள் நினைவில் கொள்ளலாம்.
பாடலில் பெண்மையம் :
பெண்கள் வீரத்திலும் திறமையிலும் தங்களின் தனித்துவத்தைக் காட்டி வந்தாலும் திரைப்பாடல்களில் இளைஞர்களின் தாகத்திற்கேற்ப பெண்ணை கொச்சைப்படுத்தும் சில வரிகள் வசனங்களும் பதிவாகிக் கொண்டு தான் இருக்கிறது.
“ பூக்காரி நீ புக்கள் மொத்தம் எத்தனை சொல்லிவிடு”
 “ ஆடாத தேகமெங்கும் ஆண் வாசனை”
 “ அதிகமா கோபப்படுற பொம்பல நல்லா வாழ்ந்தா சரித்திரமே இல்ல”
இந்த மாதிரியான பதிவுகளை விட்டு வெளியேறுவதற்கான முன்னெடுக்கக்கூடிய முழு உரிமை பெண்ணின் குரல்களுக்கு மட்டுமே உள்ளது. இதனை ‘இறைவி’ படப்பாடலில் காணலாம்.
 “கள்ளிப்பால் கவிழ்த்து
 முட்புதர் பாதை கடந்து,
 கயவர் கண் மறைத்து
 உயர வளர்ந்து நிற்கும்
 ஒவ்வொரு பெண்ணும் சரித்திரமே!!”
 “ நாகரீக உலகம் டிஜிட்டல் மயம் என்று  அறிவியல் வளர்ந்து கொண்டே சென்றாலும்  இன்றும் கற்பழிப்பும் பெண்ணை அடக்கி வைக்கும்  ஆணாதிக்க மனோபாவமும் ஓங்கியே நிற்கிறது
என்பதை மறுக்க இயலாது.”
 பெண்களை குலசாமிகளாகவும், தேவதைகளாகவும் கொண்டாடப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படித்தான் சங்க மகளிர் வாழ்ந்தனர்.
“ சகமனுஷியாக மதியுங்கள்
 அதுபோதும் என்பது ஆண்களுக்கான செய்தி!
விடுதலை உனக்கு யாரும் கொடுக்க வேண்டியதில்லை!
 எடுத்துக்கொள்!
மனிதியே வெளியெ வா!
மனிதம் என்ற சொல்லுக்குள் நீ அடங்காதே! 
பெண்ணை தெய்வமாக வணங்கும் சமூகமே, பெண்ணை தாசியாகவும் பார்க்கிறது, இந்நிலை மாற..
தன்னிலை தாழாது எழுந்து நில்!  அவலத்திற்குள் அடங்காது !   துரோகத்திற்குள் துவளாது !
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையால் ஆடை முதல் அங்கம் வரை அகத்தை கட்டுக்குள்வை !  ஆணின் கோரத்தை அடக்கி ஆளலாம்!
இரா.யசோதா, M.A, P.HD, NET
 உதவிப்பேராசிரியர்,
பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி

8 Comments

  1. திரைப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டாலும் நிஜ உலகில் என்றுமே பெண் என்பவள் ஆணின் சக்தியை உணரவைக்கும் …வைக்கோல் எரிக்கும் தீக்குச்சி…. தாயாக, தாரமாக, மகளாக அக்கா வாக…அனைத்தையும் பெற்றவன் பாக்கியசாலி…. நன்றி அருமையான தலைப்பில்..உங்கள் உணர்வான வரிகளுக்கு.

  2. எல்லாரும் கண்ணகியாய் இருந்து விட்டால் எய்ட்ஸ் குறைந்து விடும் என்றா ? சரிதான் கண்ணகியாக இருப்பது என்பது. ஆனால் கோவலன்கள் இராமர்களாக இருந்திருந்தால் குறைந்திருக்கும் என்று சிந்தனை ஏன் தோன்றவில்லை. அப்போ நமக்குள் இருக்கின்ற பார்வைகள் இன்னமும் ஆணாதிக்க வழி சிந்தனைக்குள் இருப்பதை அறிய முடிகிறதே.
    அருமை அக்கா……

  3. கட்டுரை பதிவு மிகவும் அருமை. பெண் போராளிக்கு என் வாழ்த்துகள் யசோதா.

  4. பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம்… எனவே பெண்கள் அதனை கையாளுவதில் கவனம் தேவை என்பதை உணர்ந்து அமைதியை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் அமைதியாகவும், கோபம் அடைய வேண்டிய இடத்தில் கோபம் அடைந்தும்,வீரம் வேண்டிய இடத்தில் வீரத்துடனும் செயல்படும் பண்பு போற்றுதலுக்குரியது..

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!