தமிழகம்

உசிலம்பட்டியில் 96 திரைப்படப் பாணியில், 96ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

166views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1996ஆம் ஆண்டு வணிகவியல் பாடப்பிரிவில் பயின்ற 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் இன்று 26 ஆண்டுகளுக்கு பின்பு அதே பள்ளியில் ஒன்றிணைந்து சந்தித்து கொண்டனர்.,
96 திரைப்பட பாணியில் வாட்ஸ் ஆப் குழு மூலம் 96 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ மாணவிகளை ஒருங்கிணைந்த அவர்களுடன் பயின்ற நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வை ஏற்படுத்தினர்.,
26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துக் கொண்ட மாணவ மாணவிகள் பழைய நினைவுகள் பகிர்ந்து கொண்டனர்., தொடர்ந்து தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரிய ஆசிரியைகளை அழைத்து வந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என உறுதி ஏற்றுக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!