தமிழகம்

தொண்டி இசிஆரில் 660 கிலோ ரேஷன் பறிமுதல்

109views
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் செக்போஸ்டில் ராமநாதபுரம் உணவு பொருள் கடத்தல் குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஆல்பின் பிரைட் மேரி தலைமையில் ஏட்டுகள் குமாரசாமி, தேவேந்திரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை கடக்க முயன்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 30 வீதம் கிலோ 22 மூடைகளில் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஆட்டோவை ஓட்டி வந்த கடலாடி அருகே புனவாசல் திருகண்ணன், 60 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!