தமிழகம்

சோழவந்தானில் ரயில்வே கேட் பழுதடைந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக.பொதுமக்கள். கடும் அவதி

102views
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே.மேம்பால பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
மேலும் சோழவந்தான் ரயில்வே கேட் பகுதியில் மோசமான சாலைகளால். மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி க்கு உள்ளாகி வருகின்றனர்
நேற்று மாலை மேலும் ஒரு சோதனையாக.ரயில்வே கேட் திடீரென பழுதடைந்து விட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில்வே கேட் பழுதடைந்து திறக்க முடியாத காரணத்தினால் பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது
சுமார் இரண்டு கிலோ.மீட்டர் சுற்றி முல்லை ஆற்றங்கரை பசும்பொன் நகர் வழியாக பேட்டை ரயில்வே கேட்டில்.அதிகமான வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்
மேலும் இப்பகுதியில் உயிரை காவு வாங்கும் பள்ளங்களால் சிலர் வயலில் விழும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
ரயில்வே மேம்பால பணிஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் மாற்று பாதையை சீரமைக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது.எனவும் உடனடியாக ரயில்வே நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாக மாற்றுப் பாதையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில்வே மேம்பால பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!