மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் 100 வது வார்டு பொதுமக்கள் அவதி; வைக்கம் பெரியார் நகர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
155views
மதுரை திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில் சந்தோஷ நகர் அமைந்துள்ளது. இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்கள் வசிக்கின்றனர்.
கடந்த பத்து வருடங்களாக முறையற்ற சாலை வசதிகளால் பள்ளி வாகனம், குப்பைகளை அல்லும் வண்டி ஏதும் உள்ளே வராததால் பொதுமக்கள் கடும் அவதி.
இதனால் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர் இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது இதை உடனடியாக சரி செய்து தருமாறு மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.








