தமிழகம்

முதியோர் இல்லத்தில் 15 நாட்கள் சேவை – கேகே நகர் பகுதியில் ஜாமின் கேட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவு

128views
மதுரை ஊமச்சிகுளம் அருகே நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக சஞ்சய் என்கிற வெள்ளை சஞ்சய் என்பவரை ஒத்தக்கடை காவல் நிலைய போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், சஞ்சய் தன்னை நீதிமன்ற காவலில் இருந்து ஜாமினில் விடுவிக்க மதுரை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.  இம்மனு, விசாரணைக்கு வந்த நிலையில், காவல்துறை சஞ்சய் கொலை குற்றவாளி என்பதாலும், மேலும் பல வழக்குகளில் ஏற்கனவே, ஜாமினில் உள்ளார் என்பதாலும் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் ,மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் டிசம்பர் 16ஆம் தேதி வரை 15 நாட்கள் நாள்தோறும் 2 மணி நேரம் முதியோர் இல்ல இயக்குனர் உத்தரவிடும் அனைத்து வேலைகளையும் செய்திட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!