தமிழகம்

சின்னமனூரில் வட்டார அளவில் மூன்றாம் நாள் கலைத்திருவிழா

209views
தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம் சிவகாமி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மூன்றாம் நாள் கலைத்திருவிழா தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலமாக நடைபெற்று இனிதே இன்று முடிவடைந்தது.
கலைத் திருவிழா நிர்வாக குழு உறுப்பினர்கள்  எரசக்கநாயக்கனூர்  அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், அரசு உயர் நிலைப் பள்ளி சங்கராபுரம் தலைமை ஆசிரியர், வட்டார வள மேற்பார்வையாளர், வட்டாரக் கல்வி அலுவலர்-1, வட்டார கல்வி அலுவலர்-2, அய்யம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் நகராட்சி மெயின் ரோடு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரால் கலைத்திருவிழா நிகழ்வானது நேர்த்தியான முறையில் வழிநடத்தப்பட்டது.
நடைபெற்ற கலைத் திருவிழாவில்  கலை நிகழ்வுகளாக அரசு பள்ளி மாணவ மாணவிகள் 91 விதமான போட்டிகளில் பங்கேற்று கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைத்திருவிழா போட்டிகளின் நடுவர்களாக அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செயல்பட்டனர்.  இப்போட்டிகளுக்கான இட ஏற்பாடுகளை சிவகாமி அம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர்,கவேஅ.பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
போட்டியில் ஆசிரியர் பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள்,இல்லம் தேடி கல்வி ஆசிரியர், அலுவலக உதவியாளர்கள் மற்றும் பல வேறு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கலைத் திருவிழா போட்டிகளில் சின்னமனூர் வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறவிருக்கக் கூடிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
மூன்றாம் நாள் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில்  11மற்றும்12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டி அற்புத நிகழ்வுகளை நடத்தி அசத்தினர்.
போட்டி நாளன்று மதியம் பள்ளியில் சிறப்பு விருந்தினர்களாக சின்னமனூர் நகர்மன்ற தலைவர்,சிவகாமி மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர், க.வே.அ. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மூன்று நாட்களாக நடைபெற்ற கலைத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக நிறைவு விழாவானது இனிதே நிறைவுபெற்றது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!