தமிழகம்

காவலர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த குற்றவாளிக்கு கஞ்சா சப்ளை. whatsapp வீடியோ வைரல்

214views
மதுரை சம்பட்டி புரத்தைச் சேர்ந்தவர் (17).வயது இவர் நேற்று தனது பக்கத்து வீட்டுக்காரர் ஆனந்தன் என்பவருடன் போதையில் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து ஆனந்தன் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ். எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தமிழனை கைது செய்தனர்.
முத்தமிழன் 18 வயது நிரம்பாதவர் என்பதால் இவரை மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அதற்கு முன்பாக கைது செய்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு சக காவலர்கள் இருவர் முன்னிலையிலே ஒருவர் கஞ்சா பொட்டலத்தை இவர் கையில் திணித்துச் செல்லும் வாட்ஸ் அப் வீடியோ தற்போது வெளியேறி வைரலாகி உள்ளது.

இதற்கு அங்கிருந்த மருத்துவ பணியாளர்களும் உடந்தை என தெரிகிறது. இந்த வாட்ஸ் அப் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி உள்ளது. குற்றவாளியை தண்டிக்க வேண்டிய அரசு அதிகாரிகளான காவல்துறை மற்றும் மருத்துவ பணியாளர்கள் உட்பட குற்றவாளிக்கு போதை வஸ்துகள் விநியோகம் செய்வது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!