தமிழகம்

தென்மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தென் மண்டல காவல்துறை தலைவர் ஐ ஜி அஸ்ரா கார்க் பேட்டி

109views
மதுரையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணியை தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நீரிழிவு நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக நீரிழிவு நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி தனியார் மருத்துவமனை சார்பில் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானம் முதல் உத்தங்குடி வரை 4 கிலோமீட்டர் தொலைவுக்கு “அக்கறை காட்டும் சர்க்கரை நோய்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தென் மண்டல ஐஜி அஸ்ராகார்க் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி அஸ்ராகார்க், தென்மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தீவிரமான குற்றங்களை குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.தொடர்ந்து ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, தள்ளி வைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!