ரூபாய் 3 கோடி 95 லட்சம் செலவில் புதிய யூனியன் அலுவலகம் கட்டும் பணி தீவிரம்- அதற்காக முதல் கட்ட பணிகள் துவக்கம்.
133views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வந்த கட்டிடம் மிகுந்த பழமையாகவும் , சாலையை விட்டு தரைத்தளம் கீழ்ப்புறம் ஆனதால், அதனை தகர்த்து அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு, தமிழக அரசு சார்பில் ரூபாய் 3 கோடி 95 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக பழைய கட்டிடத்தை இயந்திரம் வைத்து இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் ரூபாய் 40 லட்சம் செலவில் தற்காலிக கட்டிடம் வைத்து, பொது மக்களின் தேவைக்காக அலுவலக பணிகள் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்