பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் படத்தை அடுத்து ஐந்தாவதாக தயாரிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் டைட்டில் இணையத்தில் கசிந்துள்ளதால் வித்தியாசமான தலைப்பா இருக்கே என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்
அட்டகத்தி, மெட்ராஸ் திரைப்படங்கள் மூலம் மக்களிடம் கவனம் ஈர்த்த பா. ரஞ்சித். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். அவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்காக ஆர்யா கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடலை ஒரு குத்து சண்டை வீரரைப்போல வைத்திருந்தார்.
பா.ரஞ்சித் தற்போதுகாளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இந்தியில் ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக உள்ள ‘பிர்சா’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
பா.ரஞ்சித் இயக்குநராக மட்டும் இல்லாமல் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல இளம் இயக்குநர்களையும் ரஞ்சித் உருவாக்கி உள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஐந்தாவது படத்திற்கு ஜெ.பேபி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது.
இப்படத்தில், ஊர்வசி, அட்டகத்தி’ தினேஷ், டிக்கிலோனா மாறன் ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு மற்றும் பா.இரஞ்சித் பணிபுரிந்த சுரேஷ் மாரி இப்படத்தை இயக்க உள்ளார். இத்திரைப்படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லால் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.