கவிதை

புறத்தோற்றம்

191views
20.3.2022 அன்றைய “ரமணி ராஜ்ஜியம்” நிகழ்ச்சியில் “புறத்தோற்றம்” என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்கில் ஆகச் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் –தஞ்சை பழ வள்ளியப்பன் அவர்கள்.
புறத்தோற்றம்
தோற்றத்தில் என்ன உண்டு அழகு
மனதுக்குள் வர வேண்டும் தெளிவு
சிந்தனையில் திறமதனை வளர்த்து
நெஞ்சமதை நல்வழியில் செலுத்து
கறுப்பென்றும் சிகப்பென்றும் ஒரு மாயை
உள்ளத்தில் விதைத்து விடும் நோயை
அகமதனை ஆக்கிடுவோம் புது மலரென
நேசம் காத்து வாழ்ந்திடுவோம் சிறப்பென
செழிப்புடனே வந்து நிற்பாள் மங்கை
பார்வையிலே கவர்ந்திடுவாள் இளம் நங்கை
புறம் பார்த்தே மகிழ்வதையும் தவிர்த்து
மனம் பார்த்தே புரிதலையும் நடத்து
ஊனமென்ற படைப்பதுவும் ஒரு வகை
உடல் மட்டும் குறைபாடு சில வகை
புறத்தோற்றம் இங்கு ஒரு பொருட்டில்லை
ஒதுக்கித்தான் வைத்திடலும் அழகில்லை
உயரம் எட்ட பயிற்சியது முக்கியம்
தோற்றமது தேவையில்லை நிச்சயம்
தடம் பதித்தே முன்னேறிச் செல்லுவோம்
உலகமதை பாங்குடனே வெல்லுவோம்
வானமது இலக்கு எனக் கொள்ளுங்கள்
நேர்வழியே நன்மை எனச் செல்லுங்கள்
தோற்றமதை சற்று எட்டி வையுங்கள்
வாழ்வின் அர்த்தமது புரிபடவே வாழுங்கள்
  • தஞ்சை பழ வள்ளியப்பன்
    மதுரை

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!