மன்காட் முறை அவுட், இனி ரன் அவுட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் – ஐசிசி விதிக்கு சச்சின் வரவேற்பு
ஐசிசி சார்பில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. லண்டனில் உள்ள மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் விதிமுறைகளில் அப்டேட் செய்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு கிரிக்கெட் விதிமுறைகளில் சில மாற்றங்களை எம்.சி.சி. செய்தது.
இந்நிலையில், கிரிக்கெட் விதிமுறைகளில் கடந்த வாரம் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விதிகள் வரும் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் விதிகளில் மாற்றம் வருகிறது.அவற்றில் சில குறிப்பிடும்படியான புதிய விதிமுறைகள்:-
கொரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட உமிழ்நீர் பயன்படுத்தி பந்தை தேய்க்கக்கூடாது என்ற விதிமுறையை நிரந்தரமாக ஆக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
களத்தில் இருக்கும் ஒரு வீரர் ஆட்டமிழந்தவுடன், புதிதாக உள்ளே வரும் வீரர் தான் இனிமேல் ஸ்டிரைக்கில் நிற்பார். அவர் தான் அடுத்த பந்தை எதிர்கொள்வார்.
மன்காட் முறையில் ஆட்டமிழந்தால் அது ரன் அவுட் என கணக்கில் கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகள் அப்டேட் செய்யப்பட்ட்டன.
இந்நிலையில், மன்காட் முறையில் அவுட் என்பது ரன் ரவுட்கணக்கில் கொள்ளப்படும் என்ற விதிமுறைக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.