இந்தியா

பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு; உ.பி. உட்பட 4 மாநிலங்களில் பாஜக முந்துகிறது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

64views

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிஅமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற் றது. வரும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை நேற்று மாலை வெளியிட்டன.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பாலான ஊடகங்கள் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

# டைம்ஸ் நவ்-வீட்டோ : பாஜக 225, சமாஜ்வாதி 151, பகுஜன் சமாஜ் 14, காங்கிரஸ் 9

# நியூஸ் 18-பிமார்க் : பாஜக 240, சமாஜ்வாதி 140, பகுஜன் சமாஜ் 17, காங்கிரஸ் 4

# இண்டியா டுடே: பாஜக 288-326, சமாஜ்வாதி 71-101, பகுஜன் சமாஜ் 3-9, காங்கிரஸ் 1-3

பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 59 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். பெரும்பாலான ஊடகங்கள் ஆம் ஆத்மி அதிகஇடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. ஆளும் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

# டைம்ஸ் நவ்-வீட்டோ : ஆம் ஆத்மி 70, காங்கிரஸ் 22, அகாலிதளம் 19, பாஜக கூட்டணி 5

உத்தராகண்ட் மாநிலத்தில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 36 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். ஆளும் பாஜகபோராடி ஆட்சியைக் தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு சமமாக காங்கிரஸும் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிகிறது.

# டைம்ஸ் நவ்-வீட்டோ : பாஜக 37, காங்கிரஸ் 31

கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும். எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றுதெரிகிறது. அதேநேரம் இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.

# டைம்ஸ் நவ்-வீட்டோ : பாஜக 14, காங்கிரஸ் 16, இதர கட்சிகள் 10.

மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜக ஆட்சி அமைக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

# இண்டியா டுடே: பாஜக 33-43, காங்கிரஸ் 4-8, இதர கட்சிகள் 10-23

# இந்தியா நியூஸ்: பாஜக 23-28, காங்கிரஸ் 10-14, இதர கட்சிகள் 19-26

Right Click & View Source is disabled.

error: Content is protected !!