907views
மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட அறிவியல் கவிதைகள் (சிறார்களுக்கு ) என்ற கவிதை தொகுப்பு 45வது சென்னை புத்தக கண்காட்சியில் நேற்று வெளியிடப்பட்டது.
கவிஞர் கி. ராமசாமி எழுதிய இந்த நூலின் புத்தககமும் ஒலிப்புத்தகமும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒலிப்புத்தகத்திற்கு முக்கிய பங்களிப்பும் குரல்கொடுத்தும் சிறப்பித்திருந்தார் திருமதி . அருள்செல்வி MSc., MPhil., BEd (MSc) pysicology அவர்கள்.
விழாவில், சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் .திரு.வீ.பாரதிதாசன், சட்டத்துறை அமைச்சர். மாண்புமிகு திரு.எஸ்.ரகுபதி, இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் .திரு ஈ.சரவணபவன், .தாம்பரம் காவல்துறை உயர்அதிகாரி திரு.ரவி, திரைப்பட இயக்குனர்கள் திரு.திருமுருகன், திரு.பாண்டிராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார் மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர் முனைவர். திரு.ரவி தமிழ்வாணன்.





