டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் இன்று முதல் திறக்கப்படும் என ஜனாதிபதி மாளிகை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்திர தோட்ட விழாவையொட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் புகழ் பெற்ற முகலாய தோட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். பலவித வண்ண மலர்களைக் கொண்ட இந்த தோட்டத்தில் 11 வகையான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றை தூய்மைப்படுத்தி கூடிய தாவரங்களும் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
வருடந்தோறும் இந்த மலர்த்தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த மாதம்( 12ஆம் தேதி) இன்று தொடங்கி மார்ச் (17ஆம் தேதி) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் திங்கட்கிழமைகளில் தோட்டப் பராமரிப்பு பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி அழிப்பதில்லை.மேலும் இதற்கு முன்பதிவு செய்த பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கான முன்பதிவு https://rashtrapatisachivalaya.gov.in or https://rb.nic.in/rbvisit_plan.aspx. இந்த வலைதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு நேரடி நுழைவு அனுமதிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மாளிகை செயலகம் அறிவித்துள்ளது.