விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலம்- மும்பை இந்தியன்ஸ் குறிவைத்த வீரர்கள்..!! பட்டியல் விவரம்

67views

ஐபிஎல் மெகா ஏலம் வரும் 12 மற்றும் 13ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் எடுக்க உள்ள வீரர்கள் பட்டியல் குறித்து தற்போது காணலாம். சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டுமா? கனவை நிறைவேற்றும்

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், பொலார்ட், பும்ரா ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது.

தற்போது மும்பை அணி ஏலத்தில் 48 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். அதிகபட்சமாக 7 வெளிநாட்டு வீரர்களையும், 14 இந்திய வரர்களையும் அந்த அணி தேர்வு செய்யலாம். ஐபிஎல் மெகா ஏலம்: சிஎஸ்கே ஏலம் எடுக்கவுள்ள முதன்மை வீரர்கள்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – முழு பட்டியல் தொடக்க வீரர்கள் மும்பை அணியிடம் கேப்டன் மற்றும் தொடக்க வீரராக ரோகித்தும், நடுவரிசையில் சூரியகுமாரும், ஃ பினிஷிங்கில் பொலார்டும், பந்துவீச்சில் பும்ராவும் உள்ளனர். இதனால் ரோகித்துக்கு ஜோடியாக மற்றொரு தொடக்க வீரராக மும்பை குறிவைத்துள்ள வீரர்கள் ஜேசன் ராய், குயின்டன் டி காக் மற்றும் லீவிஸ் ஆகியோரை குறிவைக்க உள்ளது. இதற்கு அதிகபட்சமாக 8 கோடி ரூபாய் வரை பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது மும்பை அணி.

ஆல் ரவுண்டர்கள் இதனையடுத்து ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஒரு இந்திய ஆல் ரவுண்டர் தேவை. அதற்கு அந்த அணி குறிவைத்துள்ளது ரிஷி தவான் மற்றும் அண்டர் 19 வீரர்களான ராஜ் பவா, அல்லது ஹங்கர்கேகர். இதற்கு மும்பை ஒதுக்கியுள்ள பட்ஜட் 8 கோடி ரூபாய். பிறகு சுழற்பந்துவீச்சுக்கு சாஹல், ராகுல் சாஹர்,ஜெயந்த் யாதவ், குர்னல் பாண்டியா ஆகியோரை மும்பை குறிவைத்துள்ளது. இதற்கு 2 வீரர்களுக்கு சேர்த்து அதிகபட்சம் 8 கோடி ரூபாய் ஒதுக்க மும்பை முன்வந்துள்ளது. வேகப்பந்துவீச்சு அடுத்த படியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேவை வேகப்பந்துவீச்சு. இதற்கு டிரெண்ட் பௌல்ட், மார்கோ ஜென்சன், ரிச்சர்ட்சன், புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை குறிவைத்துள்ளது. இதற்கு மும்பை அணி 10 முதல் 15 கோடியை செலவு செய்யலாம். எஞ்சியுள்ள 14 கோடியை வைத்து, அதிகபட்சம் 2 கோடி என 7 இந்திய வீரர்களை மும்பை குறிவைக்கலாம். இந்திய வீரர்கள் இதில் தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு போன்ற வீரர்கள் அடிப்படை விலைக்கே கிடைக்க மும்பை முயற்சி செய்யும். மற்ற பணத்தை அப்படியே வைத்து கொண்டு அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய் வைத்துள்ள வீரர்களை மும்பை அணி குறிவைக்கும். இதன் மூலம் ஒரு பலமான அணியை உருவாக்க மும்பைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!