சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் கூறுகையில்,
இன்று அதிகாலை கமலாலயத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு கரைகள் காவல்துறையால் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பான காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு மூலம் 6 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் குண்டு வீசியதாக கூறியுள்ளனர் என்றார்.
நீட் நிலைப்பாட்டை கண்டித்து குண்டு வீசியதாக கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதல்வரானவுடன் ரவுடிகளுக்கு வாழ்வு கிடைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவிற்கு உற்சாகம் தருகிறது, காரணம் கட்சி வளர்கிறது என்று அர்த்தம் என்றார்.
மேலும் குண்டு வீச்சு சம்பவம் யாரோ சிலரின் தூண்டுதலால் நடந்துள்ளது என்றூம் தனி மனிதர் செய்ய வாய்ப்பு இல்லை, இதற்கு பின்னணி இருக்கிறது என கூறினார்.
நீட் தொடர்பான கருத்துமோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டதோ என்று இந்த சம்பவங்கள் மூலம் தோன்றுகின்றது. நேற்று மாலை முதல் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை அகில இந்திய தலைமை கவனம் செலுத்தி கவனித்து வருகிறது என கூறிய அவர், காவல் அதிகாரிகள் அரசியல் தலையீடு காரணமாக முறையாக எங்களால் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.
பாஜகவில் காலம், காட்சி, தலைவர்கள் மாறி விட்டனர், இதுபோன்ற விசயங்களால் பயப்பட மாட்டோம்.
15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு என்றும் காவல்துறை மூலம் எனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உளவுத்துறை , காவல்துறையை அதிகாரம் செய்கிறது என குற்றம்சாட்டினார்.
உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையை கையில் எடுத்து, அவரே காவல் கண்காணிப்பாளர்களுக்கு எஸ்பி க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார், பிறகு டிஜிபி பதவி ஏன் இருக்கிறது? இதற்கு முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்.
காவல்துறை அரசியல்மயமவதற்கு உதாரணம் இது, உளவுத்துறை தலையீட்டால்தான் லாவண்யா மரணத்தில் காவல் கண்காணிப்பாளர்கள் முறையாக விசாரிக்கவில்லை. முறையில் வழக்கு பதிந்தனர்.
பெகாசஸ் மென்பொருள் இந்தியாவில் வாங்கப்படவே இல்லை. சட்ட விரோதமாக எனது தொலைபேசி உரையாடல் தமிழ்நாடு உளவுத்துறையினர் மூலம் ஒட்டுக்கேட்கப்படுகிறது. மத்திய விசாரணை அமைப்புகளிடம் இதுபற்றி புகாரளிக்க உள்ளேன். குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தேசிய தலைவர்களிடம் கூறியுள்ளோம் என்றார்.
குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் , கருத்தை கருத்தாக இல்லாமல் வன்முறையில் எதிர்கொள்ள நினைத்தால் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கூறிய அண்ணாமலை, தமிழக உளவுத்துறை தலைவர் வாட்ஸ் அப் பதிவில் என்னை பற்றி காவல் துறை குழுவில் பதிந்துள்ளார், அதுபற்றிய ஸ்கிரீன் ஷாட் என்னிடம் உள்ளது என்று கூறினார்.