185
ரமணி ராஜ்ஜியம் 06-02-2022 ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை
விழிக்கு இமைகள்
ஜன்னல்கள்
அதன் வழியில்
பார்வையின் பரவசங்கள்
காதல் வழிகளை
அடைத்து வைத்தாலும்
காதலின் குரல்கள்
ஜன்னல் வழிகளில்
சாடைகள் பேசும்!
என்வீட்டு ஜன்னலுக்கும்
எதிர் வீட்டு ஜன்னலுக்கும்
சாலைகள்
குறுக்கே தடையாக இருந்தாலும்
ஜன்னல் வழிகளில்
சந்திப்பு நினைவுகள்
பாலமாய்…….!
சாதியும் மதமும்
அன்பு வழிகளை
ஆயுதங்களினால்
அரட்டப்பட்டிருக்கிறது
மனிதமனங்களில்
இவைகள்
எப்போது மரணமாகும்.
ஜன்னல் வழிகள்
சரித்திரம் படைக்கும்
சாட்சிகளாய் மாறும்….!
மழையடிக்கும் போது
ஆயிரம் ஜன்னல் வழிகள்
மலை போல் மனதுக்குள்
ஒர்
நம்பிக்கை உயரங்கள்
துளிகள் பட்டவுடன்
துயரங்களும் வடிகிறது.
நீருக்குள்தான்
எத்தனை நிதர்சனங்கள்
மீள்வோம் வாழ்விலென
எண்ணம் ஏங்குகையில்
தடுப்பதென்னவோ
ஜன்னல் வழிகளல்ல
கம்பிகள்.
கம்பிகளை எண்ணும்போது
கலக்கங்கள்
காகிதங்களாய்………!
எடுத்து எழுதும் போது
மாறுபட்ட சிந்தனைகள்.
ஐன்னலை திறந்தேன்
வழி(லி)கள் தெரிந்தாலும்
வாழ்க்கை என்னவோ
தெரிந்தும் தெரியாததுமாய்……
ஆம்-
“குளு குளு” அறைகளின்
ஜன்னல்களாய்
வழிகள் இருந்தும் இல்லாமையால்
திரைச்சீலைகளுக்குள்
திசைதொரியாமல்
திண்டாடுகிறது..திணருகிறது…..!
இயற்கைக் காற்று
எப்போது கிடைக்கும்
நம்பிக்கை ஜன்னல்களில்
வழிகளைத் தேடி
நீங்களும் ……!நானும்….!
-
கவிஞர் பறம்பு நடராசன்
சிவகங்கை மாவட்டம்.
add a comment