உலக விளையாட்டு அமைப்பின் சிறந்த வீரர் விருதை சமீபத்தில் வென்றவரும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பருமான 33 வயது ஸ்ரீஜேஷ் நேற்று அளித்த பேட்டியில்,
‘ஒலிம்பிக் பதக்கம் ஒரு கனவாகும். ஒலிம்பிக் பதக்கத்தின் நிறத்தை சிறப்பானதாக (தங்கம் அல்லது வெள்ளியாக) மாற்ற எனக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
இந்த சீசனை புரோ லீக் போட்டியுடன் தொடங்குகிறோம். அடுத்து காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் வர இருக்கின்றன. இதில் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றால் 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறமுடியும். எனவே இந்த போட்டி எங்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கக்கூடியதாகும்.
கடந்த உலக கோப்பை போட்டியில் நாங்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறவில்லை. எனவே அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் பதக்கம் வென்றால் எனது இலக்கு நிறைவடையும். தற்போது எங்களது கவனம் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான தயார்படுத்துதலை தொடங்குவதில் உள்ளது.
கோல்கீப்பருக்கு வயது ஒரு பெரிய தடையல்ல. ஆட்டத்தின் மீது நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். தனிப்பட்ட முறையில் நான் நீண்ட கால இலக்கு எதையும் நிர்ணயிப்பதில்லை.
எனது குறுகியகால இலக்கு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டி தான்’ என்று.