தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஏதாவது கருத்துக்களை பதி விட்டுக்கொண்டே இருப்பார்.
அதேபோல் தற்போது அவரின் ஒரு பதிவு அனைவரின் கோபத்தையும் தூண்டியுள்ளது.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசிய சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்ட டிவிட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பாலியல் ரீதியாக ஆபாசமாக பதிவிட்டிருந்தார்.
சித்தார்த். அவரது பதிவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இதுதொடர்பாக நடிகர் சித்தார்த்துக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு சமூக ஆர்வலர் பிருந்தாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாய்னா நேவாலுக்கு பதிலளித்த நடிகர் சித்தார்த்தின் ட்வீட், பெண்கள் மீதான அவரது வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும், அது ஆபாசமானது என்றும் சமூக ஆர்வலர் பிருந்தா அடிகே தெரிவித்துள்ளார். மேலும் சாதனை படைத்த ஒரு பெண்ணைக் குறிவைத்து இதுபோன்ற மோசமான கருத்துக்களைக் பதிவிட்ட சித்தார்த்தின் டுவிட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.