ஓமக்ரான் கிருமி எதிர்பார்த்ததைவிட மிக விரைவாகப் பரவி வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அதைக் கட்டுப்படுத்த நாடுகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என அது வலியுறுத்தியது.
இதுவரை ஓமக்ரான் கிருமி 77 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் பரவிய கொரோனா கிருமிகளைவிட, அடையாளம் காணப்படாமலேயே ஓமக்ரான் கிருமி பரவியிருக்கக்கூடும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
ஓமக்ரான் கிருமி பரப்பும் நோய் மிதமானது என முடிவுக்கு வரவேண்டாம் என்று நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்
அவ்வாறு எண்ணினால் உலகம் மிக ஆபத்தான நிலைமையைச் சந்திக்க நேரலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.