இந்தியா

வங்காளதேச விடுதலை பொன்விழாவில் கவுரவ விருந்தினராக ஜனாதிபதிக்கு அழைப்பு

66views

பாகிஸ்தானிடம் இருந்து வங்காளதேசம் விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் ஆகிறது. வங்காளதேச விடுதலை பொன்விழாவில் கலந்து கொள்ள, வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று, 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று ஜனாதிபதி ராம்நாத் வங்காளதேசத்துக்கு சென்றார். தனி ஏர் இந்தியா ஒன் விமானத்தில் டாக்கா சர்வதேச விமான நிலையம் சென்ற ஜனாதிபதிக்கு, 21 குண்டுகள் முழங்க, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்காளதேச ராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்கள் விமான நிலையத்திலேயே அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

இந்நிலையில், 2-ம் நாளான இன்று வங்காளதேச விடுதலை பொன்விழா நடக்கிறது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கவுரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். தேசிய அணிவகுப்பு மைதானத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. 3-வது நாளான நாளை டாக்காவில் ராம்னா பகுதியில் புதுப்பிக்கப்பட்ட காளி கோவிலை ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!