பார்முலா 1 கார் பந்தயத்தின் 2021 சீசனில், ரெட் புல் ரேசிங் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (நெதர்லாந்து) முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு சீசனின் கடைசி போட்டியாக நேற்று நடைபெற்ற அபுதாபி கிராண்ட் பிரீ பந்தயத்தில் (58 சுற்று) அபாரமாக செயல்பட்ட வெர்ஸ்டாப்பன் (1 மணி, 30 நிமிடம் 17.345 விநாடி) முதலிடம் பிடித்து 26 புள்ளிகள் பெற்றார்.
2வதாக வந்த மெர்சிடிஸ் அணி நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் (+2.256 விநாடி) 18 புள்ளிகள் பெற்றார். இந்த வெற்றியுடன் மொத்தம் 395.5 புள்ளிகள் குவித்த வெர்ஸ்டாப்பன் முதல் முறையாக பார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். 8வது முறையாக உலக சாம்பியனாகும் முனைப்புடன் களமிறங்கிய ஹாமில்டன் (இங்கிலாந்து) 387.5 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தார். ரெட் புல் ரேசிங் அணியின் மற்றொரு வீரர் வால்டெரி போட்டாஸ் (226 புள்ளி) 3வது இடம் பிடித்தார்.