விளையாட்டு

ரெய்னாவுக்கு ரெட் சிக்னல்.. சிஎஸ்கேவில் தக்க வைக்க இந்த 4 வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு!

69views

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைவதோடு, அணிகளுக்கு வீரர்களை எடுக்கும் மெகா ஏலமும் நடைபெற உள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மெகா ஏலத்தில் அணியின் 3 முதல் 4 வீரர்களை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தில் விடப்படுவார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் ஃப்ரான்சைஸ் அணிகள் எந்த வீரர்களை தக்க வைக்க உள்ளது, யாரை விடுவிக்க உள்ளது என்பது சஸ்பென்சாக உள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், அது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் 2022 சீசனில் சென்னை அணி நிர்வாகம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனி தான் சென்னை அணியின் முதல் சாய்ஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரோடு சேர்த்து ஆல் ரவுண்டர் ஜடேஜா, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரையும் தக்க வைக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. ஒரு அணி 3 இந்திய வீரர்களையும் ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்க வைக்கலாம். இதனால் 4ஆவது வீரராக இங்கிலாந்தின் மொயின் அலி தக்க வைக்க சிஎஸ்கே நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனிடைேய, டூப்ளசிஸ் தான் 4ஆவது வீரராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்புக்கு அளிக்க வேண்டும் என்பதால் இன்னும் சில நாட்களில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல சென்னை அணியில் இடம் பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!