விளையாட்டு

நியூசி.க்கு ஓயுட்வாஷ் அடித்த இந்திய அணி- டி20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா

57views

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் கொல்கத்தாவில் நடைபெற்றது. உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள் 3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!! .இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா, பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் துணை கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இஷான் கிஷனுக்கும், அஸ்வினுக்கு பதிலாக சாஹலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

அதிரடி தொடக்கம் முதல் ஓவரிலே ரோகித் தனது அதிரடியை காட்ட தொடங்கினார். 4ஓவர் இந்திய அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது. இந்த தொடரில் பவர் பிளேவில் இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். இதனைத் தொடர்ந்து மிட்செல் சாண்ட்னர் வீசிய ஒரே ஓவரில் இஷான் கிஷன் (29), மற்றும் சூரியகுமார் யாதவ் (0) ஆகியோர் ஆட்டமிழந்தார்.ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறினார். பொறுப்பான ஆட்டம் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச டி20 போட்டியில் தனது 26வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 25ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியன் திரும்பினர். இருப்பினும் ஹர்சல் பட்டேல் 11 பந்துகளில் 18 ரன்கள் விளாசி ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியில் சி.எஸ்.கே. வீரர் தீபக் சாஹர் 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் இந்திய அணி 19 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. அக்சர் பட்டேல் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. புவனேஸ்வர் குமார் முதல் ஓவரில் கட்டுக்கோப்பாக வீசி 5 ரன்கள் கொடுத்தார்.

ஆனால் தீபக் சாஹர் வீசிய 2வது ஓவரில் குப்தல் அதிரடி காட்ட, அந்த ஓவரில் நியூசிலாந்து அணி 16 ரன்கள் விளாசியது. இதில் கடைசி பந்தில் குப்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் தவறிவிட்டார். இதனையடுத்து அக்சர் பட்டேல் வீசிய மூன்றாவது ஓவரில் மிட்செல், சாப்மமேன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் பில்ப்ஸ் விக்கெட்டையும் அக்சர் பட்டேல் சாய்த்தார். இதனால் பவர் பிளே முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தது. சரிந்த விக்கெட்டுகள் குப்தில் மட்டும் அதிரடியாக விளையாடி 51 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.

மற்ற வீரர்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் 17.2வது ஓவரில் நியூசிலாந்து அணி 111 ரன்களில் ஆட்டமிழந்தது.73 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்திய தரப்பில்அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழித் தீர்த்து கொண்டது

Right Click & View Source is disabled.

error: Content is protected !!