ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் டி20 போட்டியில் விளையாடின. இந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 153 ரன்கள் எடுத்திருந்தது.
154 ரன்களை விரட்டிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் 117 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கேப்டன் ரோகித் 55 ரன்கள் எடுத்து அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 1 ரன் எடுத்து அவுட்டானார். இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெற்ற போது வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் தலா 12 ரன்கள் எடுத்திருந்தனர். வெற்றிக்கான ரன்களை பண்ட் சிக்சர் அடித்து உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது.