விளையாட்டு

துபாய் ஆடுகளத்தில் என்ன சிக்கல்? ஏன் இரண்டாவதாக பேட் செய்கின்ற அணி வெற்றி பெறுகிறது?

77views

நடப்பு டி20 உலகக் கோப்பையில் 13 போட்டிகள் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளன. அதில் இரண்டாவதாக பேட் செய்து இலக்கை விரட்டிய அணிகள் தான் தொடரை வென்றுள்ளன.

இந்நிலையில் துபாய் ஆடுகளம் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுகின்றன. டாஸ் வெல்லும் அணி தான் போட்டியை வெல்கிறது. ஐசிசி இது மாதிரியான ஆடுகளங்களில் முக்கிய தொடர்களை நடத்தக் கூடாது. டாஸ் வெல்கின்ற அணிக்கே கோப்பை, தொடரில் சவால் மிகுந்த போட்டி என்பதே இல்லை. இந்த தொடரை நடத்துவதற்கு நடத்தாமல் இருக்கலாம் என அது நீள்கிறது.

துபாயில் நடைபெற்று முடிந்துள்ள நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் 13 போட்டிகளிலும் இரண்டாவதாக பேட் செய்தி அணியே வெற்றி பெற்றுள்ளது. அது அரையிறுதி மற்றும் இறுதி போட்டியும் இதில் அடங்கும்.

துபாய் மைதானத்தில் 75 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட் செய்தி அணி 35 போட்டிகளில் வென்றுள்ளது. இரண்டாவதாக பேட் செய்தி அணி 39 முறை வென்றுள்ளது. இது தவிர தற்போது நிலவுகின்ற பனிப்பொழிவும் இரண்டாவதாக பேட் செய்கின்ற அணிக்கு கைகொடுத்து வருகிறது. இது தான் இரண்டாவதாக பேட் செய்கின்ற அணி வெல்ல காரணம் என சொல்லப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!