விளையாட்டு

இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.. முக்கிய வீரர் விலகல்.!!

80views

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிவான் கான்வே இறுதிப் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அபுதாபியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் லிவிங்ஸ்டன் வீசிய பந்தை சில அடிகள் இறங்கி கான்வே அடிக்க முயன்ற போது இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஸ்டம்பிங் செய்து அவுட் செய்தார்.

அவுட்டான விரக்தியில் கான்வே தனது பேட்டியில் கையால் ஓங்கி குத்தினார். இதில் காயமடைந்த கான்வேவிற்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்ததில், கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த காயத்தால் அவர் இறுதிப் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

மேலும், இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார். கான்வே இறுதிப்போட்டியில் விளையாட முடியாது, நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!