உலகம்

பறவை காய்ச்சல் கொள்ளப்படும் கோழிகள் – 9.87 மில்லியன் கோழிகளை கொன்ற நாடு.

83views

ஜப்பான் நாட்டில் கடந்த குளிர் காலத்தின் போது பறவை காய்ச்சல் வரலாறு காணாத மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் 9.87 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டன. இது அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான கோழி இறைச்சி விற்பனையை பாதித்தது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியின் அகிதா மாகாணத்தில் உள்ள யோகோடே சிட்டியின் கோழிப் பண்ணையில் கோழிகளை பிடித்து மரபணு பரிசோதனை செய்ததில் 12 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டடுள்ளது.

உடனே 1,43,000 கோழிகள் இந்த காய்ச்சலால் கொல்லப்பட்டுள்ளன. இந்த பண்ணையை சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஜப்பான் நாட்டின் மாகாணங்களிலும் கோழிக்கறி, முட்டை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிக்கன், முட்டைகள் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், நடைத்துறை அமைச்சகம் மற்றும் பிற அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!