பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.65 டாலர் குறைந்து தற்போது 83.07 டாலராக உள்ளது.
தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.66 காசுகளுக்கும், டீசல் விலை ரூ.102.59 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியையும் குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.94% குறைந்துள்ளதால் இறக்குமதி செய்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.