உலகம்

ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயா் ‘மெட்டா’ என மாற்றம்!!

66views

மார்க் ஜூக்கர்பெர்க் முகநூலின் தாய் நிறுவனத்திற்கு மெட்டா என புதிய பெயரை சூட்டியுள்ளார்.

சமூகவலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

உலகம் முழுவதும் இந்த ஆப்பை சுமார் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என அனைத்திற்கும் வழிகாட்டியாக முதல் முதலில் உருவாக்கப்பட்டது ஃபேஸ்புக். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள நபர்களை தொடர்பு கொள்ள முடியும். அத்துடன் தற்போது ஃபேஸ்புக் வேலைவாய்ப்பு ,கல்வி, வணிகம் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஃபேஸ்புக் ஆண்டு கூட்டத்தின்போது பேசிய அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் , ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். அதைக் கொண்டு புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டிய நேரமிது. தங்களது செயலிகள் அவற்றின் பிராண்டுகள் மாறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மெரிக்க பங்கு சந்தையில் ஃபேஸ்புக்கின் குறியீடு எம்.வி.ஆர்.எஸ் என மாற்றப்படுவதாகவும், இது டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதேசமயம் ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் பெயரில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளதாக தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர்பெர்க், கடந்த 10 அடுத்த 10 ஆண்டுகளில் பல கோடி பயனாளர்கள் இருப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!