கனமழை காரணமாக தமிழ்நாட்டின்7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து இரண்டு நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும்.
இதன் காரணமாக இன்று தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, விருதுநகர் ,சிவகங்கை, கடலூர் ,திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் , புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.