அறிவிப்பு

இந்திய விமான நிலையங்களில் கொரானா பரிசோதனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய, தொழிலாளர்களுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்க இந்திய தூதரிடம் ஈமான் மற்றும் அபுதாபி தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

129views

இந்திய விமான நிலையங்களில் கொரானா பரிசோதனை கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும், தொழிலாளர்களுக்கு விமான கட்டணத்தில் சலுகை வழங்கவும் இந்திய தூதரிடம் ஈமான் மற்றும் அபுதாபி தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் வலியுறுத்தல்

துபாய் இந்திய துணை தூதரகத்தில் தமிழக தொழில் முனைவோர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பினர் அபுதாபி தமிழ் சங்கம் உள்ளிட்டோர் மற்றும் துபாய்கான இந்திய துணை தூதரகர் அமன் பூரி மற்றும் தூதரக அதிகாரிகள் ராம் மற்றும் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழக தொழில் முனைவோர் மற்றும் அமைப்புக்கள் எக்ஸ்போ 2020 தளத்தில் இந்திய பவிலியனில் இடம்பெறுவது குறித்து கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. தமிழக பிரமுகர்கள் மற்றும் திறன் மிகுந்த தமிழக பள்ளிக் குழந்தைகளை இந்திய பெவிலியனில் பங்கேற்க செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய அரபு அமீரக வாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

குறிப்பாக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரத்து செய்யவும் தொழிலாளருக்கு இந்திய அரசாங்கம் இலவச இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்து தரவும், இறந்தவர்களின் உடலை கட்டணமின்றி தாயகம் எடுத்துச்செலவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன

தமிழகத்தில் நலிவடைந்த பள்ளிகளை தேர்வு செய்து அவற்றை புனரமைப்பது மற்றும் மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினார், மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை அமீரகத்திற்கு அழைத்து துபாயில் உள்ள இந்திய பெவிலியன்யில் கவுரவம் படுத்தல் உள்ளிட்டவைகள் பேசப்பட்டது…

நிகழ்ச்சியில்  தொழிலதிபர் நோபல் மெரைன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சாகுல் ஹமீது,ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஹமீது யாசின், பிர்தவ்ஸ் பாஷா தொழிலதிபர்கள் டி நடராஜன், டிகே ராமன், டாக்டர் சிவராமன் உள்ளிட்ட அபுதாபி தமிழ் சங்கத்தினர் பங்கேற்றனர்
அமீரகத்தில் உள்ள தமிழக அமைப்புகள் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது

அரசு பள்ளி மாணவர்களை துபாய் சர்வதேச கண்காட்சியில் கவுரவிக்க நடவடிக்கை:

தமிழகத்தில் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கம் அரசு பள்ளி மாணவர்கள் அமீரகத்தில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியின் இந்தியா பெவிலியனில் கவுரவிக்கப்படுவார்கள் என்று இந்தியாவுக்கான துணைத்துாதர் அமன் பூரி அறிவித்துள்ளார். துபாயில் உள்ள துாதரகத்தில் தமிழக தொழில் முனைவோர், துபாய் ஈமான் அமைப்பினர் மற்றும் அபுதாபி தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்தித்து வலியுறுத்திய கோரிக்கையை துாதரகம் ஏற்றுக் கொண்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!