தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் இருப்பவர் நடிகர் அஜித் குமார். இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த வலிமை படப்பிடிப்பை முடித்துவிட்டு வடமாநிலங்களில் இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றி பார்த்தார். அதன் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 19) இந்திய, பாகிஸ்தான் நாட்டை இணைக்கும் வாகா எல்லைக்கு நடிகர் அஜித்குமார் சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடியது மட்டுமின்றி அவர்களுடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் தனது கையில் தேசிய கொடியை ஏந்தி போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. எப்போதும் தேசப்பக்தியோடு இருப்பவர் நடிகர் அஜித் என அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.