வடகொரியா நீருக்குள் சென்று தாக்கும் ஏவுகணையை கிழக்கு கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வடகொரிய நாடானது அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சர்வதேச அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் நீருக்கடியில் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அண்டை நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் நீருக்கடியில் திட்டமிடப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.
முன்னதாக அமெரிக்கா- தென்கொரியா இடையே நடைபெற்ற வடகொரியாவின் அணுசக்தி பயன்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.