இந்தியா

சிறப்பு புலனாய்வு படை மீண்டும் காஷ்மீருக்கு விரைவு! தாக்குதல் குறித்து விசாரிக்க அமித் ஷா உத்தரவு

62views

ஜம்மு – காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் தொடர்ச்சியாக குறிவைத்து கொல்லப்படுவதை விசாரிக்க சென்று, சமீபத்தில் டில்லி திரும்பிய சிறப்பு புலனாய்வு படையினரை, மீண்டும் காஷ்மீர் சென்று விசாரணையை தொடரும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு பின், ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகளை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியதை அடுத்து, அங்கு அமைதி திரும்ப துவங்கியது.

வன்முறை சம்பவங்கள் படிப்படியாக குறைய துவங்கின.நான்கு பேர் பலிஇந்நிலையில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் தங்கள் வன்முறை வெறியாட்டத்தை ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் துவங்கி உள்ளனர்.இந்த மாத துவக்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நான்கு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை குழு கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், ஜம்மு – காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள்தெரிவித்தனர். இதையடுத்து ஜம்மு – காஷ்மீர் சென்று தாக்குதல் குறித்து விசாரிக்கும்படி, சிறப்பு புலனாய்வு படையினருக்கு அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.சிறப்பு புலனாய்வு படையினர் ஜம்மு – காஷ்மீர் விவகாரங்களில் இதுவரை விசாரணை நடத்தியதில்லை.

மத்திய அரசின் உத்தரவை அடுத்து, கூடுதல் இயக்குனர் தலைமையில் சிறப்பு புலனாய்வு படையினர் காஷ்மீர் விரைந்தனர்.விசாரணையை முடித்து கடந்த 16ல் டில்லி திரும்பினர். அன்று ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதலில், தெருவோர வியாபாரி ஒருவர் மற்றும் தச்சு தொழிலாளி ஆகியோர் பலியாகினர்.இவர்களில் ஒருவர் பீஹாரின் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர். மற்றவர் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பிழைப்புக்காக ஜம்மு – காஷ்மீரில் வசித்து வந்தனர்.

28 விசாரணை அமைப்புகுல்காம் மாவட்டத்தின் வான்போ பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில், பிழைப்புக்காக வெளி மாநிலங்களில் இருந்து வந்த இருவர் பலியாகினர்; மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.ஜம்மு – காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி உள்ளது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக காஷ்மீர் வந்துள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு படையினரை மீண்டும் ஜம்மு – காஷ்மீர் சென்று விசாரணையை துவக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்தரவிட்டார்.

இதன்படி சிறப்பு படையினர் மீண்டும் காஷ்மீர் விரைந்துள்ளனர்.அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஏன் என்பதை, டி.ஜி.பி., தில்பாக் சிங்குடன் இணைந்து விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.40 சதவீதம் அதிகரிப்புஜம்மு – காஷ்மீர் மட்டும் அல்லாமல் டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த பணியில் மத்திய புலனாய்வு படை, பாதுகாப்புப் படை, டில்லி போலீஸ் உட்பட 28 விசாரணை அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பயங்கரவாத குழுக்களுக்கு உதவும் நபர்களை அடையாளம் பார்த்து, கைது செய்யும் பணியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதையடுத்து, பயங்கரவாதிகள் குறித்து வெளியாகும் உளவுத்துறை தகவல்கள், 40 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் மேற்பார்வையின் கீழ் நடக்கிறது.

ஜம்மு – காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தாக்குதல் குறித்து, என்.ஐ.ஏ., ஏற்கனவே விசாரணையை துவக்கி உள்ளது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை கண்டறிய, கடந்த ஒரு வாரத்தில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை மேற்கொண்டு உள்ளது.நிலைப்பாடு என்ன?ஜம்மு – காஷ்மீரில் நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்கள், நாட்டு மக்களை கவலை அடையச் செய்கின்றன. சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டால் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிந்துவிடும் என, மத்திய அரசு வாக்குறுதி தந்தது. ஆனால், தற்போது நிலைமை முன்பைக் காட்டிலும் மோசமாகி வருகிறது.

இந்த விஷயத்தில் தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,லோக்சபா எம்.பி., – காங்.,மத்திய அரசு மீது காங்., குற்றச்சாட்டுகாஷ்மீர் நிலவரம் குறித்து, காங்., – எம்.பி., ராகுல், டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ஜம்மு – காஷ்மீர் காங்கிரஸ் பொறுப்பாளர் ரஜினி படீல், மாநில தலைவர் குலாம் அகமது மிர் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர் தாரிக் ஹமீத் கர்ரா ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின் காங்., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:மோடி அரசு முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. போதிய நிர்வாக திறமை இல்லாத காரணத்தால், பயங்கரவாதிகளின் தாயகமாக ஜம்மு – காஷ்மீர் மாறும் நிலை உருவாகி உள்ளது.அங்கு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் தான் இது நாள் வரை மோதல்கள் நடந்து வந்தன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பலவீனமான நிர்வாகத்தால், சாதாரண மக்கள் மீதும் தாக்குதல்கள் துவங்கியுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பீஹாரில் பதற்றம்பீஹாரின் பங்கா மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் குமார், 30, சமீபத்தில் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பீஹாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு அவரது உடல் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. பங்கா மாவட்டம் முழுதும் நேற்று பதற்றமாக இருந்தது. அரவிந்த் குமாரின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!