உலகம்

தான்சானியா எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

64views

ஸ்டாக்ஹோம்:கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்புகள் 4ம் தேதி முதல் துறை ரீதியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டது.தான்சானியாவின் ஸான்ஸிபார் என்ற இடத்தில் 1948ல் பிறந்த அப்துல் ரசாக், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 10க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி உள்ளார். இவரது ‘பாரடைஸ்’ நாவல், 1994ம் ஆண்டு ‘புக்கர்’ பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது.வளைகுடா நாடுகளில் அகதிகள் பிரச்னை, காலனி ஆதிக்கம் குறித்து இவர் சமீபத்தில் எழுதிய புத்தகத்திற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!