தமிழகம்

நீலகிரி, சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு பெய்யக்கூடும்

46views

நீலகிரி, சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”

6.10.21

நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு அமையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இருக்கக்கூடும்

7.10.21

வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

8.10.21

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிந் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

9.10.21

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

கனமழைக்கான எச்சரிக்கை:

இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யும்

இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை:

அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மிதமான மழை சென்னையின் ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!