ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் நிறைய உள்ளதால் மக்கள் பாகிஸ்தானிற்கு அகதிகளாக செல்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இவர்களின் ஆட்சி முறைக்கு பயந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதாலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் மக்கள் வேறு வழியின்றி வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் எல்லைப் பகுதியான ஸ்பின் போல்டக் பகுதியில் தலீபான்கள் முகாமிட்டுள்ளனர்.
குறிப்பாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் மக்கள் அப்பகுதியில் தலீபான்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் தலீபான்கள் கூறியதில் “இது உங்கள் சொந்த நாடு. இதை விட்டு எவரும் வெளியேற வேண்டாம்” என்று மன்றாடி வருகின்றார்கள். ஆனால் இதற்கு மக்களோ “எங்களுக்கு வேறு வழி இல்லை. இங்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்கிறோம்” என்று கூறியுள்ளனர். குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ஆப்கான் பொதுமக்களை எந்தவித ஆவணம் இன்றி அனுமதித்த பாகிஸ்தான் தற்போது அடையாள ஆவணங்கள் சரியாக வைத்திருப்பவர்களை மட்டும் அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.